அதிமுக கட்சியின் மகளிர் துணை செயலாளர் காயத்ரி ரகுராம். இவர் மதுரையில் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சமூக நீதி என்று பேசும் திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இன்று சாக்லேட் போல போதைப்பொருள் அனைத்து மாணவர்களுக்கும் சகஜமாக கிடைக்கிறது. மதுரையில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதோடு மக்களுக்காக எந்த ஒரு திட்டமும் கிடைக்கவில்லை. படித்த மற்றும் ஒரு திறமை வாய்ந்த அமைச்சர் மதுரையில் இருந்த நிலையில் அவரும் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்று விட்டதால் மதுரை மக்கள் திண்டாடுகிறார்கள்.

திமுக அரசு பெண்களுக்கு எதிராக செயல்படுவதோடு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது. சத்துணவு திட்டம் என்பது எம்ஜிஆர் கொண்டு வந்தது. காலை உணவு திட்டத்தால் எந்த ஒரு பயனும் இல்லை. திமுக அரசு விளம்பரத்தில் மட்டும் வேற லெவலில் இருக்கிறது. அவர்கள் விளம்பரம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஒரே ஒரு செங்கலை வைத்து உதயநிதி மக்களையும் ஏமாற்றி விட்டார்.  கண்டிப்பாக வருகிற தேர்தலில் திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று கூறினார்.

மேலும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை படித்த மற்றும் திறமை வாய்ந்த அமைச்சர் தற்போது அமைதியான முறையில் இருப்பதால் மக்கள் திண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டு காயத்ரி ரகுராம் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.