
சேலத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் திமுகவின் வாக்கு வங்கி 7 சதவீதம் வரை குறைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு கணக்கு சரியாக தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை.
முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறார். நான் செய்த சாதனைகளை நம்பி நான் ஒருபோதும் தேர்தலை சந்தித்ததில்லை. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற 41 மாதங்களில் பொதுமக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டணி கட்சிகளை நம்பித்தான் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.