அதாவது சாட்டை துரைமுருகன் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துறைமுருகன் திமுக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார் என்று போடப்பட்டுள்ளது.  உனக்கு செய்தி கூட ஒழுங்காக போட தெரியவில்லை.  நான் கொள்கை பரப்புச் செயலாளர். அண்ணன் கிட்ட நான் சொன்னேன் ஒரு ஆறு மாசம் திமுகவுக்கு போயிட்டு ஒரு லாஜிக் பண்ணிட்டு வரட்டா என்று கேட்டேன். அவர் சொன்னார் என்ன கூட சேர்த்துக்குவாங்க டா. ஆனா உன்ன சேர்த்துக்க மாட்டாங்கன்னு சொன்னாரு. இப்போ எப்படி இறங்கி வேலை பார்க்கிறார்கள் என்றால் சீமான் கட்சி நோட்டாவை விட கீழ போகணும்.

அதனால திமுக காரங்க நீங்க உதயசூரியனுக்கு போட வேண்டாம். நாம எப்படியும் ஜஸ்ட் பாஸ் ஆனாலும் பரவால்ல. நமக்கு ஒரு எம்எல்ஏ வந்தாலும் வராட்டாலும் பரவால்ல. சீமான் இந்த தேர்தலில் அதிகம் ஓட்டு வாங்கிட கூடாது. இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு கர்நாடகாவுல செருப்பை கழட்டி அடிச்சானே அவன் கிட்ட வாங்கி குடிக்கலாம். சொம்புல வாங்கி காவிரி தண்ணிய குடிங்கடா. உங்களுக்கு வெக்கமா இல்லை. ஜனநாயகம் என்றால் நேருக்கு நேர் மோதணும் டா. எல்லா பயலும் ஓடி போய்ட்டான். நாங்க தான் திமுக எதிரி, நாங்க திமுகவுக்கு எதிரி என்ற எல்லா பயலும் ஓடிப் போயிட்டான். எல்லா பயலும் ஓடி போனாலும் களத்திலே நெத்திக்கு நெத்தி. நேருக்கு நேர் சண்டை செய்ய பிரபாகரன் புள்ள வருவான்டா” என்று பேசியுள்ளார்.