முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எதிரான அவதூறு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திமுக அதிமுக கட்சியினர் மாறி மாறி குற்றம் சாட்டுகிறார்களே தவிர நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை. இரு தரப்பும் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள மாறி மாறி குறை சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் என நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.