முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முதியவர் ஒருவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பாடுகள் குறித்து பாராட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. முதலமைச்சர் அடையார் பார்க்கில் காலை நேரத்தில் வாக்கிக் செல்லும்போது பொதுமக்களுடன் உரையாடி வருகிறார். நேற்று வாக்கிங் சென்றபோது முதியவர் ஒருவர், திமுக ஆட்சியில் கோயில்களுக்கு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெறுவதாக பாராட்டி பேசினார். மேலும், நீங்க கோயிலுக்கு எதுவும் செய்யதில்லைனு நிறைய பேர் சொல்றாங்க, ஆனா உங்கள் அட்வைஸ்படி சேகர்பாபு நிறைய நல்ல காரியங்களை செய்கிறார் என முதியவர் கூறினார்.