மத்திய மந்திரி அமித்ஷா  செய்தியாளர்களை சந்தித்த நிலையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்திய நிலையில் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பார் என்றார். அதன்பிறகு இனி அண்ணாமலை தேசிய அரசியலில் ஈடுபடுவார் என்றும் மாநில தலைவரை மாற்றிய பிறகுதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறுவது முற்றிலும் தவறு என்றும் கூறினார். அதன் பிறகு தற்போதும் அண்ணாமலை தலைவராகத்தான் என் அருகில் இருந்திருக்கிறார் எங்கள் கூட்டணியில் குழப்பம் கிடையாது அடுத்து வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொள்ளும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பின் அதிமுக பாஜக இணைந்து ஆட்சி அமைக்கும் என்றார்.

இந்நிலையில் திமுகவை ஊழல் கட்சி என்று அவர் கடுமையாக சாடினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 39,665 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறினார். அவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஊழல்வாதிகள் என்று குறிப்பிட்ட நிலையில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கண்டிப்பாக 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும் இந்த ஊழலை மறைப்பதற்காக தான் தேவையில்லாமல் தொகுதி மறு சீரமைப்பு மற்றும் நீட் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப திமுக முயற்சிக்கிறது என்றும் கூறினார். நாங்கள் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் மொழியை மிகவும் கௌரவமாக பார்க்கிறோம். மேலும் பிரதமர் மோடி தமிழ் மக்களை மதித்து காசி தமிழ் சங்கமம் வளர்த்தார் என்று கூறினார்.