தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் , தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள் அதேசமயம் புத்திசாலிகள். தமிழ்நாட்டிற்கு மூன்று மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. பாஜக தான் தமிழகத்திற்கு அனைத்தும் செய்தது என பிரதமர் கூறியுள்ளார்.