
திமுக கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று வேல்முருகன் கூறியுள்ளார். அதாவது பண்ருட்டி தொகுதிக்கு அரசு போதிய திட்டங்களை கொண்டு வரவில்லை என்று அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அதன் பிறகு பட்ஜெட்டில் பண்ருட்டி தொகுதிக்கு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனில் வருகிற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வது பற்றி யோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதோடு சில விஷயங்களில் அவர் நேரடியாகவே திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விலகுவார் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வேல்முருகன் கூட்டணியில் இருந்து விலகக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் கூட்டணியிலிருந்து வேல்முருகன் கண்டிப்பாக விலக மாட்டார் விலகவும் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.