சென்னையில் உள்ள பல்லாவரத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மொழிப்போரில் பல தியாகிகள் உயிர் நீத்துள்ளனர். உயிர் நீத்த தியாகிகள்தான் தமிழ்த்தாயின் பிள்ளைகள். இதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டை இரு மொழிக் கொள்கை கொண்ட மாநிலமாக பாதுகாத்து வந்தோம். ஆனால் மும்மொழி கொள்கையை திணிக்க பார்க்கிறார்கள்.

மொழிப்போர் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழிக் கொள்கையை திணிக்க பார்க்கிறார்கள். பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலமாக ஹிந்தியை திணிக்க பார்க்கிறார்கள். எனவே யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக டெல்லியில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும். மேலும் இந்த போராட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து நடைபெறும் என்று கூறினார்.