திருச்சியில் விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. நேற்று இவரது வீட்டிற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது இன்று தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் திருச்சியிலுள்ள விவசாயிகள் அனைவரும் என்னுடைய வீட்டுக்கு வந்து ஒன்று திரண்டு இங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்வதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. 100க்கும் மேற்பட்ட காவலர்கள் நாங்கள் வெளியே செல்ல முடியாதவாறு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மனுவில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், உற்பத்திக்கு இரண்டு மடங்கு அதிகமான லாபம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் மற்ற மாவட்டங்களில் மனு கொடுக்க அனுமதி அளித்த வகையில் திருச்சியில் மட்டும் அனுமதிக்காதது ஏனென்று கேள்வி எழுப்பியத்துடன் இவ்வாறு செய்வது தனக்கு வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.