திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 3 இளம் பெண்கள் அறைகுறை ஆடையுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து ரீல்ஸ் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரயில்வே கோட்ட பாதுகாப்பு கமிஷனர் அபிஷேக் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் படி ரீல்ஸ் வெளியிட்ட 3 இளம் பெண்கள் வீடியோ எடுத்த ஒரு வாலிபர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து ஜாமீனில் அவர்களை வெளியே விட்டனர். மேலும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டவர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு நடன பள்ளியில் சேர்ந்து நடனம் பயின்று வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.