உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இதனால் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டு வருகிறது. விஐபி தரிசனம் கட்டண தரிசனம் உட்பட பல்வேறு சிறப்பு தரிசனங்களுக்கும் அனுமதி அளித்து வருகிறது.

இந்த நிலையில் புதுமண தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தை காண்பதற்கு தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பை கொடுத்துள்ளது. பலரும் திருப்பதியில் ஏழுமலையான் சன்னிதியில் திருமணம் செய்வார்கள். திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் புதுமண தம்பதிகளுக்கு நல்ல அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் புதுமண தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ வாரி கல்யாணத்தில் பங்கு பெற்றால் சகல சுகங்களும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை