பஞ்சாப் மாநிலம் குருத்வாரா அருகே இன்று காலை முப்பது வயது பெண் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல் கட்ட விசாரணையில் இறந்தவர் பல்ஜிந்தர் கவுர் என்பது தெரியவந்தது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காததால் குற்றவாளி, அந்த பெண்ணை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து போலீஸ் சார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.