மத்திய, மாநில அரசுகள் திருமணத்தின்போது நெருக்கடியை சந்திக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கத்தை கொண்டு பல்வேறு திருமண உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் நாட்டில் சாதி மறுப்பு கலப்பு திருமணங்கள் ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வரும் திட்டம் தான் டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், இந்த திட்டமானது 2013 ஆம் வருடம் தொடங்கப்பட்டது, கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. தனித்தனி தவணைகளாக இரண்டு முறை பணம் வழங்கப்படும், வீட்டு செலவுகளுக்கு,  வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கும் தம்பதியரின் கூட்டு வங்கி கணக்கில் 1.50 லட்சம் டெபாசிட் செய்யப்படும்.

மீதமுள்ள ஒரு லட்சம் அம்பேத்கர் அறக்கட்டளையிலேயே மூன்று ஆண்டுகளுக்கு நிலையான வைப்பு தொகையாக சேமிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தம்பதியருள் ஒருவர் எஸ்சி/, எஸ்டி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு சேர்ந்தவராகவும், மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் சலுகைகள் பெற விரும்பும் விண்ணப்பதாரர் [email protected] என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.