
சேலம் மாவட்டம் சீனிவாசா காலனியில் தங்கவேல் என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் 2 வது மகள் கார்த்திகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் வீட்டில் பெற்றோர்கள் சம்பந்தம் பேசி நிச்சயம் செய்துள்ளனர்.
இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சு அடித்து கடந்த ஒரு வாரமாக பெற்றோர் உறவினர்கள் வீட்டுக்கு சென்று கொடுத்து வந்துள்ளனர். ஆனால் இந்த திருமணத்தில் கார்த்திகாவுக்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவ நாளன்று கார்த்திகாவின் பெற்றோர் திருமண அழைப்பிதழை உறவினர் வீட்டிற்கு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திகா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து வீடு திரும்பிய அவரது பெற்றோர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திகாவின் உடலை நீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் விசாரணை நடத்தினர். இதில் கார்த்திகாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.