கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழஞ்சநல்லூர் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக சினேகா (24) என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு திருமணம் ஆன நாளிலிருந்து அடிக்கடி குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதேபோன்று சம்பவ நாளிலும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் விக்னேஷ் தன் மனைவியை மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துக் கொளுத்திவிட்டார்.

இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் சினேகா வலியில் அப்போது பக்கத்தில் நின்ற விக்னேஷுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது தொடர்பாக காட்டுமன்னார் காவல்துறையினர் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் நேற்று சினேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டதால் அவர் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.