
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் ஒரு 40 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு 40 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் 2 கணவன்களும் இறந்துவிட்டனர். அந்தப் பெண் மூன்றாவதாக அந்த தொழிலாளியை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்தின் போது சற்று வயிறு பெரிதாக இருந்துள்ளது. இது பற்றி அந்த பெண்ணிடம் அவர் கேட்டபோது தொப்பை என கூறிவிட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் வயிறு பெரிதானதால் ஹாஸ்பிடலுக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.
அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கர்ப்பத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதை தொழிலாளி அறிந்தார். இருப்பினும் அவர் பெருந்தன்மையுடன் அந்த பெண்ணையும் குழந்தையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் அந்த பெண்ணுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்தப் பெண் குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு ஹாஸ்பிடலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் அவர் வரவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தொழிலாளி தேடியும் கிடைக்காததால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அவர் ஒரு காப்பகத்தில் இருப்பது தெரியவந்த நிலையில் அங்கு சென்று பெண்ணை மீட்டனர்.
அப்போது குழந்தையை மீட்டுத் தருமாறு அவர் வேறொரு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததும் அவர்கள் காப்பகத்தில் சேர்த்ததும் தெரிய வந்த நிலையில் அந்த பெண் அவருடன் வாழ விருப்பமில்லை என்று கூறியதோடு தன்னுடைய குழந்தையை மட்டும் தன்னிடம் கொடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி போலீசார் அந்த பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் அந்த தொழிலாளி பரிதாபமாக என்னை ஏமாற்றி விட்டார் என்று வேதனையோடு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து புலம்பிய படியே சென்ற சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.