
உத்திரபிரதேச மாநிலம் எட்டாம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்ரம் சிங். 25 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவர் சிறைக்கு சென்று ஒரு வாரத்திற்கு முன்பாக ஜாமினில் வெளிய வந்துள்ளார். இவருக்கு திருமணத்திற்கு முன்பாக நேகா என்ற 18 வயது பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது.
இதனிடையே நேகாவுக்கு வேறொருவருடன் பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று விஸ்ரம் மற்றும் நேகா இருவரும் தங்களுடைய காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.