உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது பற்றி சிலருக்கு தெரிந்த நிலையில் இந்த விவகாரம் பஞ்சாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த பஞ்சாயத்தில் விசாரணை நடத்திய போது இருவருக்குமே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.

குறிப்பாக அந்த ஆணுக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்தப் பெண்ணுக்கு பஞ்சாயத்தில் ஒரு அதிர்ச்சிகரமான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, தலைமுடி வெட்டப்பட்டு, முகத்தில் கருப்பு மை பூசி தண்டனை வழங்கினார்கள். அப்போது அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக வந்த கள்ளக்காதலனை ஊர் பொதுமக்கள் அடித்து விரட்டினார்கள். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 20 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.