
ஜப்பான் நாட்டில் இளைஞர்களிடையே திருமண உறவில் ஈடுபாடு இல்லாதது மற்றும் ரோபோக்கலுடன் குடும்பம் நடத்துவது போன்ற செயல்களால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனாலும் அதில் பயனில்லை என்பது போல் தற்போது ஜப்பானில் இளைஞர்களிடையே நட்பு திருமணம் டிரண்டாகி வருகிறது. அதாவது இந்த திருமண உறவில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டாலும் வேறொரு நபருடன் உறவு வைத்துக் கொள்ளலாம். இவர்கள் பெயருக்கு திருமணம் மட்டும் செய்து கொள்வார்கள். மற்றபடி அவர்களுக்குள் எந்த உறவும் இருக்காது.
இந்த திருமணத்தை பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. குடும்பம் என்ற ஒன்று தேவையாக இருக்கும் நிலையில் அது சுமையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தற்போது பலரும் நட்பு திருமணத்தை விரும்புகிறார்கள். இந்த நட்பு திருமணத்தில் குடும்பம் சார்ந்த அனைத்து விஷயங்களும் இருப்பினும் உடலுறவு மட்டும் இருக்காது. ஆனால் இவர்களில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்கள் செயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த நட்பு திருமணத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு வரை சுமார் 500 பேர் செய்திருந்தனர். ஆனால் தற்போது 12 லட்சத்திற்கும் அதிகமானோர் நட்பு திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.