உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமான பெண்ணை ஒரு இளைஞர் சந்திக்க வந்த நிலையில் திடீரென அந்த பெண்ணின் கணவன் உட்பட குடும்பத்தினர் அறைக்குள் வந்துவிட்டதால் உடனடியாக இளைஞர் பயந்து போய் அங்கிருந்த ஒரு பெரிய பெட்டிக்குள் ஒளிந்து கொண்டார்.

இருப்பினும் பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகப்பட்டு அறையை முழுவதும் சோதனை செய்தபோது வாலிபர் பெட்டிக்குள் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபர் அரைகுறை உடையுடன் பெட்டிக்குள் இருந்த நிலையில் அவரை மடக்கிப்பிடித்து பெட்டிக்குள் வைத்தே கையை கயிறால் கட்டி கம்பு போன்ற ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினார். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இளைஞர் தன்னை விட்டு விடும்படி மிகவும் கெஞ்சி கேட்டு அழுத நிலையிலும் அவர்கள் விடாமல் அந்த வாலிபரை கொடூரமாக அடித்து தாக்கினர். அந்த வாலிபர் பெண்ணை தவறான நோக்கத்தோடு சந்திக்க வந்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக இதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் செல்லவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.