விழுப்புரம் மாவட்டத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வரும் நிலையில் இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் கருணாமூர்த்தியின் தாயார் ரமணியுடன் விழுப்புரத்தில் ஸ்வேதா வசித்து வந்தார். கடந்த மாதம் 30-ம் தேதி அதாவது உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ராணி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் தீபாவளி பண்டிகையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

அவர் மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் சுவேதா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் போலீசார் கிடுக்கு பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது ரமணியின் இளைய மகன் தட்சிணாமூர்த்தி தன் அண்ணி மீது சந்தேகம் இருப்பதாக காவல்துறையினரிடம் கூறியதால் ஸ்வேதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் போது ஸ்வேதாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே ஆண் நண்பர்கள் பலருடன் தொடர்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் அவருக்கானவர் வெளியூருக்கு சென்றதால் பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் ஸ்வேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் ஓட்டுநர். இவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் அதனை ஒரு நாள் மாமியார் ரமணி பார்த்துவிட்டார். இதனால் பயந்து போன ரமணி சம்பவநாளில் வெளியே சென்று பிரைட் ரைஸ் வாங்கி வந்து அதில் தூக்க மாத்திரையை கலந்து மாமியாருக்கு கொடுத்துள்ளார். பின்னர் சதீஷ்குமாரை வரவைத்து மண்ணெனையை அவர் மீது ஊற்றியுள்ளார்.

பின்னர் ஸ்வேதா மாமியார் மீது தீ வைத்து எரித்துவிட்டார். அவருடைய அழகை சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் சதீஷ்குமாரும் ஓடி வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இருவரும் எதுவும் நடக்காதது போன்று இருந்த நிலையில் தற்போது விசாரணையில் உண்மைகள் தெரிந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் திருமணம் ஆன 3 மாதத்தில் கள்ள உறவில் இருந்ததோடு அதனை நேரில் பார்த்த மாமியாரை மருமகள் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.