கர்நாடக மாநிலம் மைசூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் சாம்ராஜ் நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில்போஸ் அந்த கோயிலுக்கு வந்தார். இவருடன் சுற்றுலா துணை இணை இயக்குனர் சவிதா மற்றும் பல அதிகாரிகள் வந்தனர். இவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுனில்போஸ்  சவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தார்.

இந்த நிகழ்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுனில்போஸ் தனது பிரதான பத்திரிகைகளில்  தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி இருந்தார். அப்போது பா.ஜனதாவினர் தேர்தல் அதிகாரிகளிடம் சுனில்போஸ் மற்றும் அதிகாரி சவிதா இருக்கும் புகைப்படத்தை காட்டி, அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று கூறினர். ஆனால் அப்போது மறுத்த அவர் தற்போது சவிதாவின் நெற்றியில் திலகம் வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.