சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முள்ளிவாடியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், 4 மாதங்களுக்கு முன்பு சேலம் ஒடியப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவிற்காக பெண் தனது தாயின் வீட்டிற்கு அவர்  வந்திருந்தார். அங்கு கடந்த 5-ம் தேதி மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். விசாரணையில் அவர் கண்ணீருடன் தனது கணவரைப் பற்றி தெரிவித்தார்.

4 மாதங்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் தமிழ்செல்வனை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின்னர் தனியாக இருக்கும் போது என்னுடைய நிர்வாண புகைப்படங்களை  செல்போனில் எடுத்து வைத்திருந்ததாகவும், அதை கண்டுபிடித்து பார்த்தபோது பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் அதில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் என்னுடைய புகைப்படத்தை பல நண்பர்களுக்கு அனுப்பி வைத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வந்து பகலில் வேறு நபர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து, மிரட்டி அடித்ததாகவும், அதையும் புகைப்படம் எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, பெண் போலீசார், பெண்ணின் கணவர் தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, கணவர் தமிழ்செல்வன் மற்றும் ராயபுரம் அருகே உள்ள அந்தகலூரைச் சேர்ந்த நடராஜன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழ்செல்வனை போலீசார் விசாரணை செய்தபோது, தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்து மகிழ்ந்து, அதனை தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களை அழைத்து வந்து தனது மனைவியுடன் உல்லாசமாக இருக்க வைத்ததாகவும், அதற்கு பணம் பெற்றதாகவும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் மற்றும் நடராஜனை  போலீசார் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில், பெண்ணுடன் உல்லாசமாக இருந்த மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.