
ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர்.
அந்த வாலிபரும் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த 11ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.