
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தை சேர்ந்த அருண் திவான் என்ற இளைஞர் அக்டோபர் 26 அன்று ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அருண் அடுத்த நாள் காலையில் 5:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டபோது பெண்ணின் குடும்பத்தினர் அவரை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். இந்த சம்பவம் கிராமத்தினர் மத்தியில் வைத்து பேசப்பட்டு இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது.
அருண் திருமணத்திற்கு சம்மதித்தார், ஆனால் காலை 8:30 மணி அளவில் குளத்திற்கு சென்று குளித்துவிட்டு வருவதாக சென்ற அருண் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார். 9 மணி அளவில் அந்த பெண்ணிற்கு தொலைபேசியில் அழைத்து தன்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் தனது வாழ்க்கை அழிந்துவிட்டதாக நினைத்த பெண் வீட்டில் மற்றொரு அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.