தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் தமர்கிட்டா கிராமத்தில் திங்கட்கிழமை நடந்த ஒரு வேதனைக்குரிய சம்பவத்தில், நான்கு மற்றும் ஐந்து வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த உறவினர் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் குழந்தைகள் இருவரும் நண்பகல் நேரத்தில் விளையாடிக்கொண்டு உள்ளே ஏறினர். ஆனால் காரின் கதவு தவறுதலாக பூட்டப்பட்ட நிலையில், அவர்கள் அதிலேயே சிக்கிக் கொண்டனர். உறவினர்கள் குழந்தைகள் வெளியில் விளையாடுகிறார்கள் என நினைத்து கவனிக்காமல் இருந்தனர்.

மதியம் 2 மணியளவில் குழந்தைகளை தேடியபோது அவர்கள் காரில் இருந்ததை கவனித்த குடும்பத்தினர் உடனே கதவை திறந்து சிறுமிகளை செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் இருவரும் asphyxiation-ல்  உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். அதாவது நீண்ட நேரமாக குழந்தைகள் இருவரும் காரில் இருந்ததால் மூச்சு திணறி உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறிவிட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.