
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு திமுக கூட்டணி கொடுத்த அடுத்ததால்தான் கலந்து கொள்ளவில்லை என்று கூறிய நிலையில் அவரை விசிக நிர்வாகிகள் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் விசிக கட்சியின் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், கூட்டணி கட்சியின் நிர்பந்தத்தால் தான் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என விஜய் எந்த அடிப்படையில் கூறினார். அவர் கூறியது திருமாவளவனை சிறுமைப்படுத்துவது தான் என்று தெரிவித்தார். அதன்பிறகு எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கூறும்போது, திருமாவளவனை கூட்டணிகளின் கட்டுப்பாட்டில் சிக்கி கிடப்பவர் என்று விஜய் கூறியது அபத்தமானது மற்றும் அவலமானது. இது கண்டிக்கத்தக்க பேச்சு. திருமாவளவனை பற்றி கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ அல்லது இன்றைக்கு இருக்கக்கூடிய முதல்வரோ அப்படி சொன்னது கிடையாது. அவர்களுக்கு முரணான கருத்துக்களை திருமாவளவன் சொன்னபோது கூட கொள்கை அடிப்படையில் பேசுகிறார் என்று முதல்வர் கூறினார். திருமாவளவன் கருணாநிதியுடன் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறார்.
ஜெயலலிதா திருமாவளவன் நம் கூட்டணியில் இல்லாவிடிலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறியுள்ளார். யார் இந்த விஜய் எப்படி எங்கள் தலைவரை கொச்சைப்படுத்தலாம். எங்கள் தலைவர் சுயமாக முடிவெடுக்கக்கூடிய அறிவார்ந்த தலைவர் என்பது இந்த உலகத்திற்கு தெரியும் நிலையும் 35 வருடங்களாக பத்திரிகையாளர்கள் அவரை பார்க்கும் நிலையில் யாரையாவது அவர் எழுதி வைத்து படித்தார் என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். நேற்று வந்த கூத்தாடி இப்படி பேசலாமா. அதை அனுமதிக்க முடியுமா. திமுக கட்டுப்பாட்டில் இருக்கிறார் திருமாவளவன் என்று எப்படி விஜய் கூறலாம் என்று ஆவேசமாக கூறினார். மேலும் திருமாவளவனை திமுக கூட்டணி கட்டுப்படுத்தி வைப்பதாக விஜய் கூறிய நிலையில் திருமாவளவனை விஜய் அவமானப்படுத்தி விட்டதாகவே அவருடைய கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.