
திருமாவளவன் வேங்கை வயலுக்கு போக முடியுமா? போக சொல்லுங்கள் பார்க்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னால அமைச்சர் ஜெயக்குமார். “நான் கேட்கிறேன் திருமாவளவன் அவ்வளவு கூட்டணியில் இருக்கிறார். வேங்கை வயலுக்கு போக சொல்லுங்கள் பார்க்கலாம். அரசு அதிகாரிகளுக்கு பின்னால் ஒவ்வொரு அரசியல் இருக்கிறது. எனக்கு திமுக மினிஸ்டர் தெரியும், திமுக ஒன்றிய அமைச்சர் தெரியும் என்று சொல்றாங்க. எல்லாருக்கும் தான் தெரியும் . ஆனால் தவறு செய்வது என்பது வரக்கூடாது. தவறு செய்தால் காப்பாற்றுவார்கள் என்று தவறு செய்த அதிகாரிகளுக்கு வருவதால் தவறுகள் வருகிறது.
இதுதான் உண்மை . VAO வையே அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி விட்டு சென்று விட்டார் உதவியாளர் என்று கூறியுள்ளார் . மேலும் திருமாவளவன் வேங்கை வயலுக்கு போக முடியுமா போக சொல்லுங்கள் பார்க்கலாம். தோழர்கள் தானே ஆதிதிராவிடர் மக்கள் தானே . ஏன் போகவில்லை ” என்று பேசியுள்ளார்.