
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தா, சென்ற ஆண்டு இறுதியில் ‘மயோசிடிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயிலிருந்து மீண்டு வருவதே இவருக்கு பெரும் சவாலாக இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிகிச்சை முடித்துவிட்டு சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு பயணம் செய்துள்ளார். அதன் பிறகு திரைப்பட நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார்.
சமந்தா இந்த நிலையில் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்கும் விதமாக ஹெவி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இவரது சாகுந்தலம் பட டீசர் வெளியாகி வைரலான நிலையில், ஜிம்-ல் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram