கேரளாவில் உள்ள மலபுரத்தில் மசூதியில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக நேர்ச்சை விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஒரு சடங்குக்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. அப்போது அந்த யானை திடீரென மிரண்டு கூட்டத்திற்குள் ஓடிவிட்டது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்த ஓடிய நிலையில் ஒருவர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.

அவர் கீழே விழுந்த நிலையில் அவரை யானை மிதித்து ஓடியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அந்த யானை ஒருவர் தும்பிக்கையால் தூக்கி வீசியது. மேலும் இது 29 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.