கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கிளாபாளையம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவர் சாமி வீதியுலா வாகனத்தை கடந்து சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பச்சையப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.