சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது போதையில் ஒருவர் சாலையில் படுத்திருந்த நிலையில் அவர் மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது எடப்பாடியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் மது போதையில் சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்றார். பின்னர் ஒரு சாக்கை சாலையில் விரித்து படுத்து தூங்கினார்.

அவரை அங்கிருந்து செல்லுமாறு அவ்வழியே சென்றவர்கள் கூறினார். இருப்பினும் அதை அவர் காது கொடுத்து கேட்காமல் அங்கேயே படுத்தார். இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவரை கண்டித்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் யாருக்காவது தைரியம் இருந்தால் என்மீது வண்டியை விடுங்கடா என்று கூறியவாரே அங்குபடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.