
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” (கோட்) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, மோகன், பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் அமீர், கணேஷ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி போன்ற பிரபலமான நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அப்பா மகன் ஆகிய 2 வேடங்களிலும் நடிகர் விஜய் நடித்துள்ளார்.
இந்த படத்தில் வெங்கட் பிரபு மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்யை தொழில்நுட்பத்தின் உதவியோடு மிகவும் இளமையாக காட்டியுள்ளார். இந்த படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படபிடிப்பானது சமீபத்தில் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தின் ட்ரைலரை பற்றி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “உங்களுக்காக ட்ரைலர் தயார் செய்து இருக்கிறோம் சில நாட்கள் பொறுமையாக இருங்கள் நாளை முறையான அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
We are getting an amazing trailer ready for you. So please stay calm and give us a couple of days ❤️🤗 Will give you a proper update tomorrow #GOAT
— Archana Kalpathi (@archanakalpathi) August 12, 2024