
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசான நிலையில் தி கோட் படத்தில் வரும் ஒரு காட்சி தற்போது இணையத்தில் மிகவும் டிரண்டாகி வருகிறது. அதாவது கோட் படத்தில் வரும் ஒரு காரில் சிஎம் நம்பர் பிளேட் இருக்கிறது. அதில் TN 07 CM 2026 என்ற நம்பர் இருக்கிறது. நடிகர் விஜய் பயணிப்பது போன்று படத்தில் காட்சிகள் உள்ளது.

இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடும் நிலையில் முதல்வராக வெற்றி பெறுவார் என்பதால் தான் இப்படி ஒரு நம்பர் பிளேட்டை படத்தில் வைத்துள்ளதாக கருத்து தெரிவித்தது வருகிறார்கள். மேலும் இதுகுறித்து புஸ்ஸி ஆனந்திடம் கேட்டபோது அவரும் அதை நோக்கிதானே நாங்கள் பயணிக்கிறோம் என்று கூறினார். மேலும் தி கோட் படத்தில் அரசியல் நகர்வு இருக்கா இல்லையா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது மெயின் பிக்சரையே களம் இறக்குவது போல் செய்யும் நம்பர் பிளேட்டை காருக்குள் இறக்கி சூசகமாக அரசியல் வருகையை படத்தில் விஜய் அறிவித்துள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.