பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என ஜெயக்குமார் சி. சண்முகம் மூத்த தலைவர்கள் பலரும் பேசி வந்தனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை கூறியதாவது, பாஜக தீண்டதகாத கட்சி. நோட்டா கட்சி. பாஜகவால் தான் தோற்றோம் என கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு நான் பெருமைப்படுகிறேன். இன்று பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

அந்த அளவுக்கு நாங்கள் உழைத்து உள்ளோம். மற்றபடி நான் எந்த கட்சியையும் எந்த தலைவரையும் சிறுமைப்படுத்தி பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி எல்லாம் இருக்கிறது? யார் தலைவர்? யார் முதல்வர்? என்பதை எல்லாம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எங்களுடைய நோக்கம் பாஜகவை நிலை நிறுத்த வேண்டும் என்பதுதான் என கூறியுள்ளார்.