
தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே பக்தர்கள் www.tnstc.in, tnstc mobile app மூலமாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.