சமூக வலைதளங்களில் ஜாபர் சாதிக் உடன் தொடர்புப்படுத்தி பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என திரைப்பட இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் பிரசாந்தின் குடும்பத்தினரின் வங்கி கணக்கில் இருந்து திரைப்பட இயக்குனர் அமீரின் வங்கி கணக்கிற்கு ஒரு கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின.

இது தொடர்பாக செய்திகளும் ஊடகங்களில் வெளியான நிலையில் இயக்குனர் அமீர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜாபர் சாதிக் குடும்பத்துடன் பரிமாற்றம் செய்ததாக பரவும் தகவல் உண்மை இல்லை எனவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்க துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொள்கை கோட்பாடு கொண்ட தன்னை சித்தார்ந்த ரீதியாக எதிர்கொள்ளவதே மாண்பு என்றும் அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது மாண்பு அல்ல என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.