உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமாக இருப்பவர் மாயாவதி. இவருக்கு 68 வயது ஆகிறது. இவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ‌ தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தற்போது மாயாவதி விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, அம்பேத்கர் கொள்கையை பின்பற்றும் கட்சியினரை பலவீனமாக்கும் செயல்கள் நடைபெறுகிறது.

சுயமரியாதை மற்றும் கௌரவம் மிக்க பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து செயல்படும். எனக்கு உடல்நலம் சரியில்லாத போது நான் இங்கு இல்லாத போது பகுஜன் சமாஜ் கட்சி வாரிசாக ஆகாஷ் ஆனந்தை நிறுத்தியது முதல் இப்படிப்பட்ட செய்திகள் பரவுகிறது. நான் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வரும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. அந்த பேச்சுக்கே தற்போது இடமில்லை. மேலும் பகுஜன் சமாஜ் கட்சிக்காக என் கடைசி மூச்சு இருக்கும் வரை பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.