இந்தியாவில் துணை ராணுவ படைகளில் 83 ஆயிரம் அரசு இதழ் அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தப்படும். இந்த நிலையில் இந்த வருடம் இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது சிஆர்பிஎஃப், எஸ்எஸ்சி உள்ளிட்ட துணை ராணுவ படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுகள் 13 உள்ளூர் மொழிகளில் நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்வு 13 உள்ளூர் மொழிகளில் நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அது மூலமாக அது மட்டும் இல்லாமல் அடுத்த பத்து வருடங்களில் உலகின் முதல் மூன்று பொருளாதர நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.