
சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 1965ஆம் வருடம் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே பராசக்தி படம் அடுத்த வருடம் பொங்கல் முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல பொங்கல் பண்டிகை முன்னிட்டு தான் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் படமும் வெளியாக இருக்கிறது. இதனால் விஜய்யின் ஜனநாயகன் படமும், பராசக்தி படமும் ஒரே நாளில் மோதும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.