
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்டீபன் ராபர்ட் என்பவர் 13 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளார். காரில் சிறுமியை கடத்தி சென்ற ஸ்டீபன் ராபர்ட் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு காரை ஒரு இடத்தில் பார்க் செய்து விட்டு ஸ்டீபன் ராபர்ட் இறங்கி சென்ற பிறகு காகிதம் ஒன்றில் HELP ME என்று எழுதிய சிறுமி கண்ணாடி வழியாக வெளியில் தெரியும்படி காட்டியுள்ளார்.
இதனை காரை கடந்து சென்ற ஒருவர் பார்த்துவிட்டு அவசர என்னை அழைத்து புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டதோடு ஸ்டீபன் ராபட்டையும் கைது செய்தனர். இது குறித்து சிறுமி கூறுகையில் “ஸ்டீபன் ராபர்ட் தன்னை துப்பாக்கியை காட்டி காரில் ஏறவில்லை என்றால் தன்னை காயப்படுத்தி விடுவதாக மிரட்டினார்” எனக் கூறியுள்ளார்.