
புனேவில் பூஜா கேத்கர் என்பவர் பயிற்சி கலெக்டராக பணியாற்றி வருகின்றார். அவர் தன்னுடைய சொகுசு காரில் மராட்டிய அரசு என எழுதியதுடன் அந்த காரில் ரெட் சைரனும் வைத்துள்ளார். இந்நிலையில் கலெக்டர் அஜய்மோர் இல்லாத சமயத்தில் அவர் கலெக்டரின் அறைக்கு சென்று அவரது நாற்காலியில் அமர்ந்து அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் அதிகாரம் செய்துள்ளார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கலெக்டரிடம் பூஜா கேத்கர் பற்றி புகார் அளித்துள்ளனர்.
மேலும் இவரைப் பற்றி புனே மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளருக்கு புகார் கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளார். இதையடுத்து பதவியை தவறாக பயன்படுத்தியதால்அவரை வாசிம் மாவட்டத்திற்கு மாற்றினர். மேலும் புகாரின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக அவர் கொடுத்த ஆவணத்தை ஒரு குழுவை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே எக்ஸ் எனும் சமூக வலைத்தளத்தில் பூஜா கேத்கரின் தாயார் மனோரமா கேத்கர் என்பவர் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டிய படி வீடியோ ஒன்று வெளியானது, சமூக வலைத்தளத்தில் வைரலாக வந்த விடியோவை பார்த்த காவல்துறையினர் மனோரமா கேத்கரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.