
துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா எல்லையில் உணரப்பட்டுள்ளதும் இதனால் இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் இடித்து மலை போல குவிந்து கிடக்கிறது. இன்னும் பல கட்டிடங்கள் இடிந்து விடும் அபாயத்தில் இருக்கிறது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மக்கள் தப்பிக்க வழி இல்லாமல் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் தமிழர்கள் பலர் அங்கு சிக்கி தவிப்பதாக தகவல் வெளியானது. இதனால், தமிழக அரசு அவர்களுக்கு உதவி எண் வெளியிட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 044 28525648 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. தற்போது வரை துருக்கியில் நிலநடுக்கத்தால் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.