
தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு மாவட்டங்களில் பாமக கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது, திமுக கட்சியின் மூத்த அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டியவர். குறைந்தபட்சம் துணை முதலமைச்சர் பதவியாவது கொடுத்திருக்கணும். ஆனால் துரைமுருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு திமுக துணை முதல்வர் பதவியை வழங்கவில்லை. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தமிழ்நாட்டில் மட்டும் திமுக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது எனவும் இது வன்னியர்களுக்கு செய்யும் அநீதி எனவும் கூறினார்.
கடந்த 55 வருடங்களாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுகளுக்கு வலியுறுத்திய போராட்டம் இன்று வரை தொடர்கிறது என்றார். மேலும் திமுகவில் உள்ள மூத்த அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை எனவும் திமுக வேறு வழியின்றி பொதுச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளது எனவும் அன்புமணி ராமதாஸ் கூறினார். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் திமுக துணை முதல்வர் பதவியை துரைமுருகனுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.