துலாம் ராசி அன்பர்களே,

இன்று சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. விடுமுறை காலத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். மழைக்காலங்களில் கவனமாக செயல்பட வேண்டி இருக்கும். சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். எது எப்படியோ குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். அற்புதமான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள்.

நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். உதவி என்று வந்தவர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள் என்று சொல்லலாம். செல்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். எடுக்கும் முடிவுகளில் தெளிவு ஏற்படும். தீர ஆலோசித்து எந்த முடிவையும் எடுப்பது நல்லது. பெண்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

தயவு செய்து முன்கோபம் பட வேண்டாம். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவாக அணுகுங்கள். இன்று மாணவர்கள் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். சிந்தனையை ஒருநிலைப்படுத்துவீர்கள். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஏழு
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்