துலாம் ராசி அன்பர்களே,
இன்று காரியங்களில் நீங்கள் முழு முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள். சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பணி சுமை அதிகரிக்கும். சொத்து விவகாரங்களில் தெளிவாக அணுகுங்கள். உணவுப் பொருட்களை தரம் அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்கள் செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டை விலகி செல்லும். எதிர்பார்த்த உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். பண வரவும் சீராக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது. இன்று மாணவர்கள் கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். பொறுப்புகள் கூடிவிடும். விளையாட்டுத்துறையிலும் சாதிப்பீர்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு
அதிஷ்ட நேரம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்