
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வனராஜா. கடந்த 2022-ஆம் ஆண்டு வனராஜா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை நித்யாவும் நித்தியாவின் கணவர் ராஜேஷும் இணைந்து வனராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன் பிறகு படுகாயமடைந்த வனராஜாவை எரித்து கொலை செய்ய முயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக வனராஜா உயிர் தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நித்யாவையும், ராஜேஷையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது சொத்துக்கு ஆசைப்பட்டு இருவரும் வனராஜாவை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நித்யாவுக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ராஜேஷுக்கு 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது