தூத்துக்குடியில் பிரபல தனியார்  உணவகத்தில் 56 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவகத்திற்கு சீல் வைத்து  உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான பழைய உணவு எண்ணெயைத் தூய்மைப்படுத்த பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

மேலும் 6 கிலோ பழைய சிக்கனை பறிமுதல் செய்து அந்த  உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.