தமிழகத்தின் தென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தேசிய கடல்சார் மற்றும் கடலியல் தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கேரள கடற்பகுதி, தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று காலை 2.30 மணி முதல் நாளை  இரவு 11.30 மணி வரை பலத்த காற்று வீசுமென்று தெரிவித்துள்ளது. கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரைகளில் படகுகள் மோதி சேதமடையும் நிலை வரலாம் என்றும் எச்சரித்துள்ளது.